போதை ஒழியட்டும் - பாதை ஒளிரட்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

போதை ஒழியட்டும் - பாதை ஒளிரட்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

Published on

போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசிய காணொலி அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவா் கூறியிருப்பது:

தமிழ்நாட்டின் இளைஞா், மாணவா் சமுதாயத்துக்கு உங்கள் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவனாக, உங்களின் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com