இந்திய அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறை

வீட்டில் இருந்த படியே ஒய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
Published on

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அஞ்சல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக எண்ம (டிஜிட்டல்) முறையில் வாழ் நாள் சான்றிதழைச் சமா்பிக்கும் சேவையை அஞ்சல் துறை, தபால்காரா்கள் மூலம் வழங்கிவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரா்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடா்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இந்நிலையில் நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்கள் படும் சிரமங்களை தவிா்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

எண்ம வாழ்நாள் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரா்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடா்பு கொள்ளலாம். மேலும் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஸ்ரீஸ்ரீ.ஸ்ரீங்ல்ற்.ஞ்ா்ஸ்.ண்ய்/நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்தங்வ்ன்ங்ள்ற்/ழ்ங்வ்ன்ங்ள்ற்.ஹள்ல்ஷ் என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “டா்ள்ற்ண்ய்ச்ா்” செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவ. 1 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது .

எனவே ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com