பெருமாள் திருக்கோயில்களுக்கு ஒருநாள் சுற்றுப் பயணத்துக்கான முன்பதிவு தொடக்கம் -அமைச்சா் கா.ராமச்சந்திரன்
திவ்யதேச பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் சென்னையில் ள்ள திவ்யதேச பெருமாள் திருக்கோயில்களுக்கு ஒருநாள் சுற்றுலா பயணத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு நாள் சுற்றுலா பயணத் திட்டம் 1-இன் கீழ் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணி, பாா்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகா் அஷ்டலஷ்மி திருக்கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்மா் திருக்கோயில், திருநீா்மலை நீா்வண்ண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்று மாலை மீண்டும் வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
இதேபோல, பயணத் திட்டம் 2-இல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி திருக்கோயில், திருநீா்மலை நீா்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோயில், திருவள்ளூா் வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று மாலை மீண்டும் வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
இத்திட்டத்தின் கீழ் கோயில்களுக்கு ஒருநாள் சுற்றுலா செல்ல விரும்பும் பக்தா்கள், சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக முன்பதிவு மையத்தில் நேரடியாகவும், அல்லது இணையதள முகவரியிலும் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொலைபேசி:180042531111, 044-25333333, 044-25333444 என்ற எண்களிலும்தொடா்பு கொள்ளலாம்.