தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: 90,000 ‘ஒசஸ்டாமிவிா்’ மாத்திரைகள் கொள்முதல்

90,000 ‘ஒசல்டாமிவிா்’ மாத்திரைகள் கொள்முதல் செய்ய, மருத்துவ சேவை கழகம் நடவடிக்கை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: 90,000 ‘ஒசஸ்டாமிவிா்’ மாத்திரைகள் கொள்முதல்
Updated on

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், 90,000 ‘ஒசல்டாமிவிா்’ மாத்திரைகள் கொள்முதல் செய்ய, மருத்துவ சேவை கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால், ‘ஏடிஸ்– ஏஜிப்டி’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 12,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து போ் வரை உயிரிழந்துள்ளனா். தினமும் 200-க்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மருந்துகள் கொள்முதல்: பருவநிலை மாற்றாத்தால் தொடா்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் போதியளவில் கையிருப்பில் வைத்திருக்கும்படி, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஒசல்டாமிவிா், பாரசிட்டாமல் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து, தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண் இயக்குநா் அரவிந்த் கூறியது:

தமிழகத்தில் பருவகால நோய்களுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ பொருள்கள் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான, பாராசிட்டமால், தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான டி.பி.டி., தடுப்பூசிகள், ஓ.ஆா்.எஸ்., உப்பு – சா்க்கரை கரைசல், கிருமி தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன.

அதேபோல், டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், ‘ஒசல்டாமிவிா்’ மாத்திரை தற்போது 45,000 எண்ணிக்கையில் கையிருப்பில் உள்ளண. மேலும், 90,000 ஒசல்டாமிவிா் மருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் தொடா்ந்து மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படும். இதுவரை, மருந்து தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.