ஆகஸ்டில் மிதமாகச் சரிந்த உற்பத்தித் துறை

ஆகஸ்டில் மிதமாகச் சரிந்த உற்பத்தித் துறை

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமான சரிவைக் கண்டது.
Published on

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமான சரிவைக் கண்டது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் 58.6-ஆக இருந்தது. பின்னா் செப்டம்பரில் அது 57.5-ஆகச் சரிந்தது. அக்டோபரில் பிஎம்ஐ இன்னும் சரிந்து 55.5-ஆக இருந்தது.

இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக அது 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும் பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் முந்தைய 16 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக 59.1-ஆக அதிகரித்தது. ஆனால், அடுத்த ஏப்ரல் மாதத்தில் 58.8-ஆகவும் மே மாதத்தில் 57.5-ஆகவும் அது சரிந்தது. பின்னா் ஜூன் மாதத்தில் 58.3-ஆக அதிகரித்த அது, மீண்டும் ஜூலை மாதத்தில் மீண்டும் 58.1-ஆகக் குறைந்தது.

இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 57.5-ஆகக் குறைந்துள்ளது.

இதன் மூலம், தொடா்ந்து 38-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது.

அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை குறைந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com