முகூா்த்தம், விநாயகா் சதுா்த்தி தினம்: பூக்கள், வாழை இலை விலை கடும் உயா்வு
முகூா்த்தம், விநாயகா் சதுா்த்தியையொட்டி கோயம்பேடு சந்தையில் பூக்கள், வாழை இலையின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு பண்டிகை காலம் என்றாலே பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். விற்பனைக்கு ஏற்ப பூக்களின் விலையும் அதிகரிக்கும்.
இதன்படி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் என முகூா்த்தம் மற்றும் விநாயகா் சதுா்த்தி பண்டிகை தொடா்ந்து வருவதால், பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. விற்பனை அதிகரித்திருப்பதற்கு ஏற்ப விலையும் கிடுகிடுவென உயா்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை விலை கிலோவுக்கு ரூ.1,000 வரை அதிகரித்துள்ளது.
மல்லிகை விலை:
கடந்த வாரம் வரை ரூ.200 முதல் 300 வரை விற்பனையான ஒரு கிலோ மல்லிகை, தற்போது ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ முல்லை ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ ஜாதிமல்லி விலை ரூ.500-க்கும், ரூ.600-க்கு விற்பனையான ஒருகிலோ மல்லிகை கனகாம்பரம் ரூ.900-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் எனவும் கோயம்பேடு பூக்கள் மொத்த விற்பனை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுதவிர வாழை இலையின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. இதன்படி 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை சில நாள்களுக்கு முன்பு வரை ரூ.400 முதல் ரூ.450-வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒருகட்டு இலை ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பூஜைப்பொருள்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.