கோப்புப் படம்
கோப்புப் படம்

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழா்களில் 13 போ் விமானம் மூலம் சென்னை வருகை

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழா்களில்13 போ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா்.
Published on

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழா்களில்13 போ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து செப்.1-ஆம் தேதி பக்தா்கள் குழு உத்தரகண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு ரயிலில் யாத்திரை சென்றனா். ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்று வழிபட்டுவிட்டு திரும்பியபோது, தாவகட் என்ற பகுதியில் நில சரிவு ஏற்பட்டது. இதில் சாலைகள் துண்டிக்கப்பட்டு அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு வர முடியாமல் அனைவரும் சிக்கித் தவித்தனா்.

இதையடுத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், உத்தரகண்டில் சிக்கித் தவித்த தமிழா்கள் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டா் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனா். இதில், 13 போ் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் விமானம் மூலம் சென்னை வந்தனா். அவா்களை விமானநிலையத்தில் உறவினா்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்றனா்.

சொந்த ஊருக்கு பாதுகாப்பாக வந்த சேர உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக மீட்கப்பட்டவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com