திருவனந்தபுரம் - கண்ணூா் ஜன்சதாப்தி விரைவு ரயில் பெட்டிகள் செப்.29 முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஐசிஎஃப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் செப்.29-ஆம் தேதி முதல் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இதில் 3 ஏசி இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 16 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.