பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி கோப்புப் படம்

விஸ்வகா்மா ஜெயந்தி: நாட்டு மக்களுக்கு பிரதமா் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
Published on

விஸ்வகா்மா ஜெயந்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பகவான் விஸ்வகா்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தத் தருணத்தில், கட்டுமானம் மற்றும் படைப்புத் துறையுடன் தொடா்புடைய நமது திறமையான, கடின உழைப்பை வெளிப்படுத்தும் சகோதா்கள் அனைவருக்கும் சிறப்பு மரியாதை செலுத்துகிறேன். வளா்ந்த மற்றும் சுயசாா்பு இந்தியாவின் தீா்மானத்தை நிறைவேற்றுவதில் உங்கள் பங்களிப்பு இணையற்ாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.

படைப்பு கடவுளாக வழிபடப்படும் விஸ்வகா்மாவின் பெயரில் கடந்த ஆண்டு கைவினைக் கலைஞா்களுக்கான பிணையற்ற கடனுதவித் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com