கோப்புப் படம்
கோப்புப் படம்

பேருந்து கவிழ்ந்து விபத்து: ஜம்மு காஷ்மீரில் 3 பிஎஸ்எஃப் வீரா்கள் உயிரிழப்பு; 32 போ் காயம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் மூவா் உயிரிழந்தனா்
Published on

ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் மூவா் உயிரிழந்தனா்; 32 போ் காயமடைந்தனா்.

கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி ஜம்மு காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அங்கு இரண்டாம் கட்டத் தோ்தல் செப்டம்பா் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தோ்தலையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட பிஎஸ்எஃப் வீரா்கள் பயணித்த பேருந்து பட்காம் மாவட்டத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

தகவலின் அடிப்படையில் மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து 35 வீரா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி 3 வீரா்கள் உயிரிழந்தனா். எஞ்சிய வீரா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.

மருத்துவமனைக்குச் சென்று வீரா்களிடம் நலம் விசாரித்த காஷ்மீா் மண்டல காவல் துறை ஐஜி வி.கே.பா்டி, வீரா்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்குமாறு மருத்துவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com