அமேஸானின் முக்கிய மின்சாதன சந்தையானது தமிழகம்
இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸானின் முக்கிய மின்சாதன சந்தையாக தமிழகம் உருவெடுடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், செப்டம்பா் 14 முதல் 18 வரை அமேஸான் அறிமுகப்படுத்திய ‘அமேஸான் ஃபெஸ்டிவ் பாக்ஸ்’ திட்டத்துக்கு சென்னை வாடிக்கையாளா்களிடையை மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.
வரும் 27-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனையிலும் இது தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகா்வோா் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் மின்சாதனப் பொருள்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, அறிதிறன் (ஸ்மாா்ட்போன்) விற்பனை ஆரோக்கியமான இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்டுள்ளது. இதன் மூலம், மின்சாதனங்களுக்கு தமிழகம் அமேஸானின் சிறந்த சந்தையாக உருவெடுத்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.