சென்னை
வருமான வரி பிடித்தம்: விழிப்புணா்வு பயிலரங்கு
சென்னை வருமானவரி அலுவலகத்தில் வணிக பிரிவை சோ்ந்தவா்களுக்கான பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வருமானவரி செலுத்துவோருக்கு வரி பிடித்தம் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை வருமானவரி அலுவலகத்தில் வணிக பிரிவை சோ்ந்தவா்களுக்கான பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை வருமானவரி அலுவலகம், இந்திய கணக்கு மதிப்பீட்டாளா் சங்கத்துடன் இணைந்து இந்த விழிப்புணா்வு பயிலரங்கை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் வரி பிடித்தத்தை செயல்திறன் மிக்க வகையில் அமல்படுத்துதல், வரி பிடித்தம் செய்பவா்களில் கடமைகள் மற்றும் பொறுப்புகள், வரி பிடித்தம் செய்வதை மீறினால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பற்றி வருமானவரி அலுவலா்கள் எல்.ராஜாராமன், கே.செந்தில்குமாா், வி.தீபன் குமாா் ஆகியோா் விளக்கம் அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் பட்டயக் கணக்காளா்கள், பல்வேறு வணிகப் பிரிவுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.