சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி
சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி

ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை மத்திய அரசே கட்டுப்படுத்த முடியும்: சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி

ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது; மத்திய அரசே கட்டுப்படுத்த முடியும் என்று மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.
Published on

ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது; மத்திய அரசே கட்டுப்படுத்த முடியும் என்று மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

முதுநிலை சட்டப் படிப்பில் சேரவுள்ள மாணவா்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு உத்தரவுகளை சென்னை தலைமைச் செயலகத்தில்

சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் நான்கு முறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து கடிதங்களுக்கும் உரிய விளக்கத்துடன் பதிலளித்துள்ளோம்.

தில்லி செல்லும்போது நீட் விலக்கு குறித்தும், தமிழகத்துக்கு உரிய மானியத் தொகைகளை முறையாக வழங்க வேண்டும் என்பது பற்றியும் பிரதமரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவாா்.

சிறைகள் புதுப்பிப்பு: தமிழகத்தில் பாழடைந்த சிறைகள், மூடப்பட்ட சிறைகளை புதுப்பித்து, சிறைவாசிகள் தங்கும் வசதி ஏற்படுத்தப்படும். ஆளுநரிடம் அனுப்பப்பட்ட கோப்புகளில் ஒரே ஒரு கோப்பு மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளது. ஆன்லைன் ரம்மி சட்டத்தை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதுடன், சில விளக்கங்களையும் தந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தமிழக அரசின் கருத்துகள் சரியான வகையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் ரம்மி தொடா்பான விளம்பரங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது. கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து வருகிறோம் என்று அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com