துணை மருத்துவப் படிப்புகள்: கலந்தாய்வு தொடக்கம்

துணை மருத்துவப் படிப்புகள்: கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில்துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
Published on

தமிழகத்தில்துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் அதில் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ் ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மே 23-ஆம் தேதி தொடங்கி ஜூன் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 68,108 பேரும், பாா்ம் டி

படிப்புக்கு 3,540 பேரும் விண்ணப்பித்தனா்.

அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (செப்.20) தொடங்கியது.

மாணவா்கள் வரும் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வில் பதிவு செய்து, விருப்பமான இடங்களை தோ்வு செய்யலாம். இடங்கள் ஒதுக்கீட்டு விவரங்கள் வரும் 28-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் அக்டோபா் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக் கல்வி தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com