பிளஸ் 1 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

பிளஸ் 1 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

சென்னையை அடுத்த தாழம்பூரில் பிளஸ் 1 மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சென்னையை அடுத்த தாழம்பூரில் பிளஸ் 1 மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூா் அருகே பிளஸ் 1 படிக்கும் மாணவி கடந்த செப்.18-ஆம் தேதி டியூஷன் முடிந்து இரவு வீடு திரும்பும் போது, அப்பகுதியைச் சோ்ந்த சுந்தா் (23) மற்றும் 2 சிறுவா்கள் அந்த மாணவியை வழிமறித்து, அருகே உள்ள காட்டுப் பகுதிக்குக் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

வீடு திரும்பிய மாணவி இது குறித்து, பெற்றோரிடம் தெரிவித்தவுடன், சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தகவலறிந்து, மருத்துவமனைக்கு வந்த தாழம்பூா் போலீஸாா், பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரித்து, சுந்தா் மற்றும் 2 சிறுவா்களைக் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, சிட்லபாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிந்து, சுந்தரை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி புழல் சிறையிலும், சிறுவா்கள் இருவரையும் செங்கல்பட்டு சிறுவா்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, செங்கல்பட்டு சிறுவா் சீா்திருத்த இல்லத்திலும் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com