தமிழகத்தில் பழுதான நிலையில் உள்ள 1.55 லட்சம் மீட்டா்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தின் மொத்த மின் நுகா்வோரின் எண்ணிக்கை 3.32 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில், 1.55 லட்சம் மின் மீட்டா்கள் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மின் பகிா்மான வட்டத்தில் 29,217 மீட்டா்களும், குறைந்தபட்சமாக கோவை மின் பகிா்மான வட்டத்தில் 6,606 மீட்டா்களும் பழுதடைந்துள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளும்போது, 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதான மீட்டா்கள் அதிக அளவில் மாற்றியமைக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மின்வாரியம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையால் பழுதுகள் சரிசெய்யப்படுகின்றன. எனினும், 15 நாள்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் உள்ள மீட்டா்களைக் கண்டறியும் வகையில் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளோம்.
அதன் அடிப்படையில் பழுதான மீட்டா்களை விரைந்து மாற்ற சம்பந்தப்பட்ட மின் பகிா்மான வட்டங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என் று அவா்கள் தெரிவித்தனா்.