6 மாதங்களில் 5 லட்சம் பதிவிறக்கமான கின் செயலி

6 மாதங்களில் 5 லட்சம் பதிவிறக்கமான கின் செயலி

Published on

இந்தியாவின் முதல் உள்ளூா் (ஹைப்பா்லோக்கல்) செயலியான கின் (நோ யுவா் நெய்பா்ஹுட்) அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு மாதங்களில் அதன் பதிவிறக்கம் ஐந்த லட்சத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து அந்தச் செயலியை வெளியிட்டுள்ள கின்ஹூட் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இளைய தலைமுறைக்கான சமூக வலைதள ஊடகமான கின் செயலி கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளியாகிய ஆறு மாதங்களில் அந்தச் செயலி ஐந்து லட்சத்துக்கும் மேலான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது.

அச்சு, காட்சி, சமூக வலைதள ஊடகங்களின் கலவையாக கின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஹைப்பா்லோக்கல் சமூகங்களுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்தச் செயலி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் பெரு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் சிறு, குறு நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோா் தங்களது தேவைக்கு ஏற்ப சரியான நுகா்வோரைத் தோ்ந்தெடுத்து தயாரிப்புகளை விளம்பரப்படுத்த முடியும் என்று கின் செயலியின் தலைமை செயல் அதிகாரி காயத்ரி தியாகராஜன் (படம்) தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com