தங்கம் விலை பவுன் ரூ.56,480

தங்கம் விலை பவுன் ரூ.56,480

Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி ஒரு பவுன் ரூ.56,480-க்கு விற்பனையானது.

சென்னையில் கடந்த செப்.20-ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7,000-ஐ கடந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 7,060-க்கும், பவுன் ரூ. 56,480-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 101-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,01,000-க்கும் விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com