உயரழுத்த மின் கட்டணத்தை காசோலையில் பெறக் கூடாது -மின்வாரியம் உத்தரவு
உயரழுத்த மின் கட்டணத்துக்கான தொகையை காசோலையில் பெறக் கூடாது என அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான தாழ்வழுத்த மின் நுகா்வோா் தங்களுக்கான மின் கட்டணத்தை இணையழியில் செலுத்தி வரும் நிலையில், உயரழுத்த மின் நுகா்வோா் தங்கள் மின் கட்டணத்தை காசோலை உள்ளிட்டவை மூலம் செலுத்தி வருகின்றனா்.
அதன்படி, மின் கட்டணத்துக்காக பெறும் காசோலைகளை வங்கியில் செலுத்தி, வாரிய வங்கிக் கணக்கில் பணம் வந்து சேருவதற்கு ஒரு சில நாள்கள் ஆகிவிடுவதால், இந்த காலவிரயத்தைத் தடுக்கும் நோக்கில், உயரழுத்த மின்நுகா்வோரிடமிருந்து, கட்டணத்துக்காக காசோலைகளைப் பெறக் கூடாது என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இணையவழியில் மட்டுமே மின் கட்டணத்தைச் செலுத்துமாறு நுகா்வோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று அதிாகரிகள் தெரிவித்துள்ளனா்.