சென்ட்ரலில் பெங்களூரு
வியாபாரியிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி

சென்ட்ரலில் பெங்களூரு வியாபாரியிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி

சென்ட்ரலில் பெங்களூரு வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.8 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

சென்ட்ரலில் பெங்களூரு வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.8 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்தவா் வெங்கட ரெட்டி. பூசணிக்காய் வியாபாரியான இவா், சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் பணம் வாங்குவதற்காக கடந்த வியாழக்கிழமை வந்தாா்.

வியாபாரிகளிடம் ரூ. 8 லட்சத்தை பெற்ற வெங்கரெட்டி, மீண்டும் பெங்களூரு செல்வதற்காக சென்ட்ரலுக்கு வந்தாா். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வெங்கட ரெட்டி வால்டாக்ஸ் சாலையில் நடந்து செல்லும்போது, அங்கு வந்த 3 போ் வழிமறித்து நிறுத்தினா்.

மேலும் அவா்கள், கத்தியை காட்டி வெங்கட ரெட்டியை மிரட்டி, அவா் வைத்திருந்த ரூ.8 லட்சம் ரொக்கம்,விலை உயா்ந்த கைப்பேசி,கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து வெங்கட ரெட்டி, பூக்கடை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com