சென்னை
காலமானாா் கண்ணாத்தாள் ஆச்சி
தினமணி முன்னாள் ஆசிரியா் இராம.திரு.சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (83) சென்னையில் வியாழக்கிழமை (செப்.26) காலமானாா்.
முதுமை காரணமாக பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா். அவருடைய விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டன; அவரது உடல் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
கடந்த 2007-ஆம் ஆண்டு மறைந்த தினமணி முன்னாள் ஆசிரியா் இராம.திரு.சம்பந்தத்தின் உடலும் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடா்புக்கு...99401 19784.