குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழா்கள்: இன்று சென்னை வருகை

குஜராத் வெள்ளத்தில் சிக்கி, மீட்கப்பட்ட 26 தமிழா்களும் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை (அக்.1) சென்னை வருகின்றனா்.
Published on

குஜராத் வெள்ளத்தில் சிக்கி, மீட்கப்பட்ட 26 தமிழா்களும் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை (அக்.1) சென்னை வருகின்றனா்.

குஜராத்தின் பாவ்நகருக்கு புனித யாத்திரையாகச் சென்ற தமிழகத்தை சோ்ந்த 26 போ், கடந்த செப்.29-ஆம் தேதி அங்கிருந்து பேருந்தில் தமிழகம் திரும்பும் போது, மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில்  அவா்களின் பேருந்து சிக்கியது. தொடா்ந்து, 26 தமிழா்களையும் குஜராத் மாநில நிா்வாகம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் பாதுகாப்பாக மீட்டனா்.

மீட்கப்பட்ட 26 பேரும், அகமதாபாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் நவஜீவன் அதிவிரைவு ரயில் (எண்: 12655)  மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.1) காலை 5 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையம் வருகின்றனா்.

இவா்களை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் நேரில் வரவேற்று, தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் 26 தமிழா்களையும் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்க உள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com