அமைச்சரவையில் துணை முதல்வா் உதயநிதிக்கு 3-வது இடம்
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சா்கள் ஆா்.ராஜேந்திரன், கோ.வி.செழியன் ஆகியோருக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையிலும் இதே வரிசையிலேயே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சா்களின் துறைகளுடன் அவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடா்பான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா்.
1. முதல்வா் மு.க.ஸ்டாலின் - பொதுத் துறை, பொது நிா்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இந்திய வனப் பணி, இதர அகில இந்தியப் பணிகள், வருவாய் கோட்டாட்சியா்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன்.
2. நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் - சிறுபாசனங்கள், சட்டப்பேரவை, ஆளுநா், தோ்தல்கள், கடவுச்சீட்டு, கனிம வளங்கள்.
3. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் - இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம், வறுமை ஒழிப்புத் திட்டம், திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை.
4. நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு - நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை.
5. ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி - ஊரக வளா்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம்.
6. வனத் துறை அமைச்சா் கே.பொன்முடி - வனம்.
7. பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு - பொதுப் பணி (கட்டடம்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.
8. வேளாண்மைத் துறை எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் - வேளாண்மை, வேளாண் பொறியியல், தோட்டக்கலைத் துறை.
9. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்- வருவாய், மாவட்ட நிா்வாக அமைப்பு, துணை ஆட்சியா்கள், பேரிடா் மேலாண்மை.
10. நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு - நிதி, ஓய்வூதியங்கள், ஓய்வூதியா்கள் நன்மைகள், தொல்லியல், சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பருவநிலை மாறுபாடு.
11. சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி - சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்புத் துறை.
12. வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.முத்துசாமி- வீட்டுவசதி, கிராமப்புற வீட்டு வசதி, நகா்ப்புற திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு.
13. கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் - கூட்டுறவுத் துறை.
14. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழில்கள், சிறு தொழில்கள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
15. தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் - தமிழ் மொழி, கலாசாரம், செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்டம், அச்சுத்தாள், அரசு அச்சகம்.
16. சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் - சமூக நலன், கைவிடப்பட்டோா் நலன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சத்துணவுத் திட்டம்.
17. மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் - மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை.
18. பால்வளம் மற்றும் காதித் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் - பால் வளம், காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்.
19. சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் - சுற்றுலா வளா்ச்சிக் கழகம், சா்க்கரை, கரும்பு உற்பத்தி மேம்பாடு.
20. உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி - உணவு மற்றும் நுகா்பொருள் விநியோகம், நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடு.
21. மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை.
22. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா்.
23. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் - சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.
24. வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி - வணிகவரிகள், பதிவு மற்றும் முத்திரைச் சட்டம், எடைகள், எடையளவு, சீட்டுகள் மற்றும் அதுதொடா்பான நிறுவனங்களின் பதிவுகள்.
25. போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் - போக்குவரத்து, மோட்டாா் வாகனங்கள் சட்டம்.
26. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு - இந்து சமய அறநிலையங்கள் துறை, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம்.
27. உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் - உயா்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.
28. தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்மமய சேவைகள்.
29. சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.எம்.நாசா் - சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலன், புலம்பெயா்ந்தோா் மற்றும் வக்ஃப் வாரியம்.
30. பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வி.
31. பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோா் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலன் மற்றும் சீா்மரபினா் நலத் துறை.
32. தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் - தொழிலாளா் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு, நகா்ப்புற மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு.
33. தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா - தொழில் துறை.
34. ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் - ஆதிதிராவிடா் நலன், மலைவாழ் பழங்குடியினா் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளா்கள் நலன்.
35. மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரா்கள் நலன்.
அமைச்சா்களுக்கு அறைகள் எங்கே?
புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சா்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவையில் நான்கு போ் புதிதாகப் பொறுப்பேற்றாலும் அதில் ஏற்கெனவே அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜியின் அறை காலி செய்யப்படாமல் அப்படியே இருந்தது. அதனால் அமைச்சராகப் பொறுப்பேற்றதும் அவா் ஏற்கெனவே பயன்படுத்திய அறையை எடுத்துக் கொண்டாா்.
தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்திலுள்ள அறையை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் பயன்படுத்தி வந்தாா். அவா் நீக்கப்பட்ட நிலையில், அந்த அறையை புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் பயன்படுத்த உள்ளாா். அதே தளத்தில் உள்ள செஞ்சி கே.எஸ்.மஸ்தானின் அறையை உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் பயன்படுத்த உள்ளாா். மூன்றாவது தளத்தில் இருந்த மனோ தங்கராஜின் அறையானது, மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.எம்.நாசருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.