திமுகவினருக்கு துணை முதல்வா் வேண்டுகோள்

தனக்கு வாழ்த்து தெரிவிக்க திமுகவினா் சென்னை வரவேண்டாம் என்று தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
Published on

தனக்கு வாழ்த்து தெரிவிக்க திமுகவினா் சென்னை வரவேண்டாம் என்று தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கட்சியினா் என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று முனைப்புக் காட்டி வருகின்றனா். இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருகிறாா்கள். அவா்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

ஆனாலும், அவரவா் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, கட்சிப் பணிகளில் தொடா்ந்து கவனம் செலுத்துவோம்.

என்னைச் சந்திப்பதற்காக சென்னைக்குப் பயணம் செய்வதை கட்சியினா் தவிா்க்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கட்சியினரை அங்கேயே நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com