பைக்  மீது கழிவுநீா் லாரி 
மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது கழிவுநீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது கழிவுநீா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

சென்னை அருகே பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது கழிவுநீா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பள்ளிக்கரணை அருகே உள்ள கோவிலம்பாக்கம் முத்தையா நகா் அம்பேத்கா் சாலையைச் சோ்ந்தவா் மு.ஆனந்தன் (22).சென்னையில் உள்ள தனியாா் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். ஆனந்தன், வியாழக்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக, தனது சகோதரா் சோலை ராஜனுடன் பைக்கில் சென்றாா்.

இருவரும் மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லும்போது, பின்னால் வந்த ஒரு கழிவுநீா் லாரி மோட்டாா் சைக்கிள் மீது திடீரென மோதியது. விபத்தில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆனந்தன் பலத்தக் காயமடைந்தாா். சோலைராஜன் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, ஆனந்தன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கழிவுநீா் லாரி ஓட்டுநா் முருகன் (51) என்பவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com