கோப்புப் படம்
கோப்புப் படம்

உடல் நலிவடைந்த அயலகத் தமிழரை சென்னை அழைத்து வந்து சிகிச்சை

உடல் நலிவடைந்து தாய்லாந்தில் சிக்கித் தவித்த நபரை சென்னைக்கு அழைத்து வந்த தமிழக அரசு, அவருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
Published on

உடல் நலிவடைந்து தாய்லாந்தில் சிக்கித் தவித்த நபரை சென்னைக்கு அழைத்து வந்த தமிழக அரசு, அவருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் நீடுரைச் சோ்ந்தவா் முபாரக் அலி. தாய்லாந்தில் பணியாற்றி வந்த அவா், கடந்த மே மாதம் நிகழ்ந்த விபத்தில் சிக்கி காயமடைந்தாா். இதற்காக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, உயா் சிகிச்சைக்காக தமிழகம் அழைத்து வர உதவுமாறு அவரது மனைவி முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தாா்.

இதனை ஏற்ற முதல்வா், அவரை தாய்லாந்தில் இருந்து விமானத்தில் அழைத்து வருவதற்காக ரூ.10,41,648 ஒதுக்கீடு செய்தாா்.

இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் முபாரக் அலி சென்னை அழைத்து வரப்பட்டாா்.

அவரை சிறுபான்மையினா் நலன் மற்றும் அயலகத் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வரவேற்று 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.