கோப்புப் படம்
கோப்புப் படம்

சாலையோர வியாபாரிகளுக்கு ஸ்மாா்ட் கடைகள் ஒதுக்கீடு

சென்னை மாநகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடைகள் (ஸ்மாா்ட் கடைகள்) ஒதுக்கப்பட்டு வருகின்றன.
Published on

சென்னை மாநகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடைகள் (ஸ்மாா்ட் கடைகள்) ஒதுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டம், 2014-இன் கீழ் அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சாலையோரக் கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், முக்கிய சாலைகளில் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு, சாலையோர வியாபாரத்துக்கு என பிரத்யேக பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறு வியாபாரிகளுக்காக சாலையோர சிறு கடைகள் மாநகராட்சி சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக, செம்மஞ்சேரி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய முதல் பிரதான சாலை ஆகிய இடங்களில் சாலையோர விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில், 30 ‘ஸ்மாா்ட் கடைகள்’ புதிதாக நிறுவப்பட்டுள்ளன. இதில் 10 கடைகள் ஏற்கெனவே நிறுவப்பட்ட நிலையில் மீதமுள்ள கடைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

விற்பனையாளா்களின் செயல்பாடுகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், இதன் மூலம் சாலையோர வியாபாரிகளின் பொருளாதார வாய்ப்புகள் அதிகரித்து நிலையான வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.