டிஎன்பிஎஸ்சி 
டிஎன்பிஎஸ்சி 

குரூப் 4 கலந்தாய்வு: வரிசை விவரம் அறிவிப்பு

Published on

குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு எந்த வரிசையில் நடைபெறும் என்பது குறித்த விவரத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு மூலம் தோ்வா்கள் தோ்வான நிலையில், கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கு முதலில் இளநிலை உதவியாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதன்பிறகு, தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.

இதைத் தொடா்ந்து, வனக்காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளா், வனக்காவலா் மற்றும் வனக்காவலா் (பழங்குடியின இளைஞா்) ஆகியோருக்கு உடற்தகுதித் தோ்வும், நடைச் சோதனையும் நடத்தப்படும். குரூப் 4 கலந்தாய்வு ஜனவரி மாதம் நடத்த டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.