திருப்பதி-காட்பாடி சிறப்பு ரயில்கள் தினசரி மெமு ரயில்களாக மாற்றம்

திருப்பதி-காட்பாடி சிறப்பு ரயில்கள் தினசரி மெமு ரயில்களாக மாற்றம்

Published on

திருப்பதி - காட்பாடி மெமு சிறப்பு ரயில்கள் ஜன.1 முதல் தினசரி மெமு ரயில்களாக மாற்றப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி - காட்பாடி இடையே தினமும் மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் ஜன.1 முதல் வழக்கமான மெமு ரயில்களாக மாற்றப்படவுள்ளதால், இந்த ரயில்களின் எண்கள் மாற்றப்படவுள்ளன.

திருப்பதி - காட்பாடி மெமு ரயில்கள் 07581 என்ற எண்ணுக்கு பதிலாக 67207 எனவும், 07659 என்ற எண்ணுக்கு பதிலாக 67205 எனவும், 07661 என்ற எண்ணுக்கு பதிலாக 67209 எனவும் மாற்றப்படும். காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 07582 என்ற எண்ணுக்கு பதிலாக 67210 எனவும், 07660 என்ற எண்ணுக்கு பதிலாக 67208 எனவும், 07662 என்ற எண்ணுக்கு பதிலாக 67206 எனவும் மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.