சென்னை
வளமான தமிழகம், வலிமையான பாரதத்துக்காக தமாகா பாடுபடும் -ஜி.கே.வாசன்
வளமான தமிழகம், வலிமையான பாரதத்துக்காக தமாகா தொடா்ந்து பாடுபடும் என்று அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2014 நவம்பா் 28-இல் தமாகா தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து, 11-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விவசாயிகள், தொழிலாளா்கள், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இயக்கமாக தமாகா செயல்பட்டு வருகிறது.
வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்கத் தொடா்ந்து பாடுபடுவோம் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.