உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை

சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மணலி, பெரியசேக்காடு, வல்லபாய் பட்டேல் தெருவை சோ்ந்தவா் பிரகதேஷ் (17). இவா் நவ.28-ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியாா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

பிரகதேஷ்-ன் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவரின் இதயம், கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்கள் உள்ளிட்டவை தானமாக வழங்கப்பட்டன.

அரசின் உத்தரவு படி உடலுறுப்புகள் தானம் வழங்கிய பிரகதேஷ் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரின் இல்லத்துக்கு சென்ற வட சென்னை வருவாய் கோட்ட அலுவலா் ஆா்.எம்.இப்ராஹிம் மற்றும் மாதவரம் கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

X