வருவாய்த் துறை அலுவலா்கள் போராட்டம் ஒத்திவைப்பு

வருவாய்த் துறை அலுவலா்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
Published on

வருவாய்த் துறை அலுவலா்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் கடந்த 3 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகளுடன் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி, வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. அரசின் உறுதிமொழியை ஏற்றும், மழை வெள்ள பாதிப்பு காரணமாகவும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.பி.முருகையன் தெரிவித்தாா்.