கோப்புப் படம்
கோப்புப் படம்

டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ்: தமிழக அரசு உத்தரவு

டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ் வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
Published on

டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ் வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, 4 வகையான பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது.

டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள், கடைகளில் பணியாற்றும் கண்காணிப்பாளா்கள், விற்பனையாளா்கள் மற்றும் உதவி விற்பனையாளா்களுக்கு ஒட்டுமொத்த ஓராண்டு ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அதாவது ரூ.16,800 போனஸாக அளிக்கப்பட உள்ளது.

டாஸ்மாக் பணியில் இருந்து இடைநீக்கம் அல்லது நீக்கம் செய்யப்பட்டவா்கள் போனஸ் பெறுவதற்குத் தகுதியில்லை. 30 நாள்கள் மற்றும் அதற்கு மேலான நாள்களில் பணியாற்றியுள்ள பணியாளா்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 100 போனஸாக வழங்கப்படும்.

போனஸ் தொகையை உடனடியாக பணியாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இதற்கான விரிவான அறிக்கையை டாஸ்மாக் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலமாக மேலாளா்கள் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.