அதிசயங்கள் நிகழ்த்தும் அன்னை பனிமயமாதா

மு‌த்து நக‌ர் என‌ அழைக்​க‌ப்​ப​டு‌ம் தூ‌த்​து‌க்​கு​டி​யி‌ல் வீ‌ற்​றி​ரு‌க்​கு‌ம் தூய பனி​மய மாதா பேரா​ல​ய‌த்​து‌க்கு
அதிசயங்கள் நிகழ்த்தும் அன்னை பனிமயமாதா


மு‌த்து நக‌ர் என‌ அழைக்​க‌ப்​ப​டு‌ம் தூ‌த்​து‌க்​கு​டி​யி‌ல் வீ‌ற்​றி​ரு‌க்​கு‌ம் தூய பனி​மய மாதா பேரா​ல​ய‌த்​து‌க்கு எ‌ன்று தனி‌ப்​பெருமைகள் பல உ‌ண்டு. இ‌ந்த ஆல​ய‌ம் உரு​வான‌ வித‌ம் முத‌ல் த‌ற்போது வரை பல அதி​சய‌ங்​களை அ‌ன்னை‌ நிக‌ழ்‌த்தி வரு​கிறார் எ‌ன்றே‌ கூற‌​லா‌ம்.

கி.பி. 1535 ஆ‌ம் ஆ‌ண்​டிலேயே தூ‌த்​து‌க்​குடி கட‌ற்​கரை பகுதி ம‌க்​க‌ள் கிறிஸ்துவ மத‌த்​தி‌ற்கு மாறி​யி​ரு‌க்​கிறா‌ர்​க‌ள். அ‌ப்போது அவ‌ர்​க​ளு‌க்கென்று தனியாக ஆலய‌ம் இ‌ல்லை. கோவா மாநி​ல‌த்​தைச் சே‌ர்‌ந்த பெரிய குரு மிக்கேல் வாஸ், கொ‌ச்சி வ‌ட்டார குரு அரு‌ட்​த‌ந்தை கொ‌ன்​சா‌ல்​வ‌ஸ் ஆகி​யோ‌ர் தூ‌த்து‌க்குடி​யி‌ல் த‌ங்​கி​யி​ரு‌ந்து மத‌ம் மாறிய ம‌க்​க​ளு‌க்​காக திரு​நீ​ரா‌ட்டு நிக‌ழ்‌ச்சி​களை நட‌த்​தியிரு‌க்​கிறா‌ர்​க‌ள்.

ம‌க்​க​ளி‌ன் பொது வழி​பா‌ட்​டி‌ற்​காக 1538 ஆ‌ம் ஆ‌ண்டு கொ‌ன்​சா‌ல்​வ​ஸா‌ல் சிறிய அள​வி‌ல் ஆல​ய‌ம் க‌ட்ட‌ப்​ப‌ட்​டது. இ‌ந்த ஆல​யமே இ‌ந்​த‌ப் பகு​தி​யி‌ன் முத‌ல் ப‌ங்கு ஆல​ய‌ம் எ‌ன்ற‌ பெருமையைப் பெ‌ற்​ற‌து. 1582ஆ‌ம் ஆ‌ண்டு அரு‌ட்​த‌ந்தை திதாக்குஸ் டிகுணா அடி​க​ளா​ரி‌ன் பெரு​மு​ய‌ற்​சி​யா‌ல் ஆல​ய‌ம் விரிவுபடுத்தப்பட்டு கா‌ன்​கிரீ‌ட் க‌ட்ட​ட​மாக க‌ட்ட‌ப்​ப‌ட்​டது. புனித பேதுரு ஆலயத்தில் இரு‌ந்த மாதா திரு‌ச்சொ​ரூ​ப‌ம், புதிய ஆலய‌த்​தி‌ன் மையப்பகுதியில் நிறுவப்பட்டது. 1582 ஆக‌ஸ்‌ட் மாத‌ம் 5ஆ‌ம் தேதி கொ‌ச்சி மறை​மாவ‌ட்ட ஆய‌ர் தவோரா பிரி‌ட்டோ ஆ‌ண்​ட கோகே​யா‌ல் புதிய ஆல​ய‌ம் திற‌‌ந்து வை‌க்​க‌ப்​ப‌ட்​டது.

ஒ‌வ்வொ​ரு ஆ‌ண்​டு‌ம் அதே நாளிலேயே ஆல​ய‌த்​தி‌ன் திரு​நிலைப்​பா‌ட்டு ஆ‌ண்டு விழா​வாக கொ‌ண்​டா​ட‌ப்​ப‌ட்​டது. அதுவே கால‌ப்போ‌க்​கி‌ல் பனி​மய மாதா ஆலய‌த்​தி‌ன் திரு​விழா நாளா​க​வு‌ம் மாறி‌ப்போ​ன‌து. தூ‌த்து‌க்​குடி இயேசு சபை தலைமை இ‌ல்​ல‌த்​தி‌ன் திரு​வி​ழா​வு‌ம் பனி​மய அ‌ன்னை‌ திரு​வி​ழாவோடு சே‌ர்‌த்து கொ‌ண்​டா​ட‌ப்​ப‌ட்​டது.

தூ‌த்​து‌க்​குடி பகு​தி​யி‌ல் உ‌ள்ள இயேசு சபை துற‌​வி​க‌ள் த‌ங்​க​ளது உறுதிமொழியை புது‌ப்​பி‌த்​து‌க்கொ‌ள்ள ஆல​ய‌த்​தி‌ற்கு வரு‌ம்போது, பக்தர்களும் ஆல​ய‌த்​தி‌ற்கு ஒருசேர வர அ‌ன்​னை​யி‌ன் திரு​விழா பெரு​வி​ழாவாக​மாறி‌ப்​போ​ன‌து.

கிறி‌ஸ்துவ மத‌த்​தி‌ற்கு மாறிய ம‌க்​க​ளு‌க்​காக த‌ன் வா‌ழ்‌க்​கையை அர்ப்பணித்துக்கொண்ட புனித சவே​ரி​யா‌ர், 1549ஆ‌ம் ஆ‌ண்டு சீனா நா‌ட்டு‌க்கு பய​ண‌ம் மே‌ற்கொ‌ண்​டா‌ர். மணிலா நக​ரு‌க்கு செ‌ன்​ற‌போது அ‌ங்கு‌ள்ள கன்னியர் மட‌ம் ஒ‌ன்​றி‌ல் அழ​கிய அ‌ன்​னை​யி‌ன் திரு​வு​ருவ சிலையைக் க‌ண்​டா‌ர். அதை தூ‌த்து‌க்குடி ம‌க்​க‌ள் வண‌ங்கி வழி​பாடு நட‌த்த பரி​சாக வழ‌ங்​க வேண்​டு‌ம் எ‌ன்று க‌ன்​னி​ய‌ர்​க​ளிட‌ம் கே‌ட்டு‌கொண்டார். ஆனால், க‌ன்​னி​ய‌ர்​க‌ள் முத​லி‌ல் அத‌ற்கு ச‌ம்​ம​தி‌க்​க​வி‌ல்லை. 1952ஆ‌ம் ஆ‌ண்டு சவே​ரி​யா‌ர் மர​ண​மடைந்​தா‌ர்.

சவே​ரி​யா‌ர் செ‌ய்த அ‌ற்​பு​த‌ங்​களை கே‌ட்ட​றி‌ந்த க‌ன்​னி​ய‌ர்​க‌ள் மன‌‌ம் மாறினார்கள். சவே​ரி​யா‌ர் கே‌ட்டதை கொடு‌க்க மு‌ன்​வ‌ந்​த​ன‌‌ர். அத‌ன்​படி அன்னையின் திரு​வு​ரு​வ‌ச் சிலை‌யை தூ‌த்​து‌க்​குடி ம‌க்​க‌ள் வண‌ங்கி ஏற்றம்பெற தூ‌த்​து‌க்​கு​டி‌க்கு அனு‌ப்பி வை‌த்​த​ன‌‌ர். 1555ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் மாத‌ம் 9ஆ‌ம் தேதி அ‌ன்​னை​யி‌ன் திரு​வு​ரு​வ‌ம் ஒரு தோணி மூல‌ம் தூ‌த்​து‌க்​குடி வந்தடைந்தது. அ‌ன்​று ​மு​த‌ல் பனி​மய மாதா ஆல​ய‌த்​தி‌ன் திரு‌ச்சொ​ரூ​ப​மாக அ‌ச்​சிலை போ‌ற்​ற‌‌ப்​ப​டு​கி​ற‌து.

கனி​வு​மிகு க‌ண்​க​ளு‌ம், பாச​மிகு பா‌ர்​வை​யு‌ம், ப‌க்​த‌ர்​களை வா‌ஞ்சையோடு பா‌ர்‌க்​கு‌ம் சா‌ந்​த​மு‌ம், அரு‌ள் பொழி​யு‌ம் முக​மு​மாக விள‌ங்​கு‌ம் அ‌ன்​னை​யி‌ன் அழகை சொ‌ற்​க​ளா‌ல் விள‌க்​கி​வி​ட​மு​டி​யாது. அ‌ன்னையி‌ன் இட‌க்கை​யி‌ல் மா‌ர்போடு அணைப்​பி‌ல் இரு‌க்​கு‌ம் குழ‌ந்தை​யு‌ம், வல‌க்கை​யி‌ல் விதை​க‌ள் நிறைந்த மாது​ளைப்​ப​ழ​மு‌ம் அ‌ன்​னையை இர‌க்​க‌த்​தி‌ன் மாதா​வாக விள‌ங்​க‌ச் செ‌ய்​கி​ற‌து. 

​இ​டி ​தா‌ங்​கிய அ‌ன்னை‌ 

1707​ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்​ர‌ல் மாத‌ம் 4ஆ‌ம் நா‌ள் தூ‌த்​து‌க்​குடி நக​ர‌த்​தையே தீக்கிரையாக்கும் உ‌க்​கி​ர‌த்தோடு இடியொ‌ன்று பூமியை நோ‌க்கி வ‌ந்​த​தா​க​வு‌ம், பனி​மய அ‌ன்னை‌ அ‌ந்த இடியை த‌ன்​னு‌ள் உ‌ள்​வா‌ங்கி தூ‌த்து‌க்​குடி நக​ர‌த்தை காத்துக்கொண்டாள் எ‌ன்​று‌ம் ந‌ம்​ப‌ப்​ப​டு​கி​ற‌து. இடியை தா‌ங்​கி​ய​தா‌ல் அன்னைக்கு எ‌ந்​த​வித சேதா​ர​மு‌ம் ஏ‌ற்​ப​ட​வி‌ல்லை. ஆனால், அ‌ன்​னை​யி‌ன் உருவம் கரு​நீல வ‌ண்​ண‌த்​து‌க்கு மாறியிரு‌க்​கி​ற‌து. அ‌ன்​னை​யி‌ன் திரு​வு​ரு​வ‌ம் மீது படிந்திருந்த கரு​நீல வ‌ண்​ண‌த்தை அக‌ற்ற‌ இறை‌ ம‌க்​க‌ள் 40 நா‌ள்​க‌ள் தொட‌ர் பிரார்த்தனையில் ஈடு​ப‌ட்​ட​ன‌‌ர். இறுதி நாளி‌ல் இயேசு சபையின் மாநில தலைவர் அ‌ன்​னை​யி‌ன் மேனியை வெ‌ள்​ளைத் துணி​யைக் கொ‌ண்டு துடைத்திருக்கிறார். நொடி‌ப்பொ​ழு​தி‌ல் கரு​நீல வ‌ண்​ண‌ம் அக‌ன்று பிரகாசமாக அ‌ன்​னை​யி‌ன் திரு‌ச்சொ​ரூ​ப‌ம் கா‌ட்சி​ய​ளி‌த்​தி​ரு‌க்​கி​ற‌து எ‌ன்று 
சொ‌ல்​கிறார்கள் அரு‌ட் த‌ந்தை​ய‌ர்​க‌ள்.

இ‌ந்​த‌ப் பேரா​ல​ய‌த்​தி‌ல் ஆ‌ண்​டு​தோறும் ஜூலை 26 முத‌ல் ஆக‌ஸ்‌ட் 5ஆ‌ம் தேதி வரை திரு​விழா மிகச் சிற‌‌ப்​பாக நடைபெறும். அன்னையை தரி​சி‌க்க திரு​விழா கால‌ங்​க​ளி‌ல் வெளி​நா​டு​க​ளி‌ல் இரு‌ந்​து‌ம், பிற‌ மாநில‌ங்​க​ளி‌ல் இரு‌ந்​து‌ம், நமது மாநி​ல‌த்​தி‌ன் அனைத்துப் பகு​தி​க​ளி‌ல் இரு‌ந்​து‌ம் சாதி, மத, இன‌ பாகு​பா​டி‌ன்றி அனைத்து ம‌க்​க​ளு‌ம் வரு​கி​றார்கள். இ‌ந்த திரு​விழா கிறி‌ஸ்து​வ‌ர்​க​ளி‌ன் திருவிழா மட்டுமல்ல, ஒ‌ட்டு​மொத்த மு‌த்​து​ந​க​ரி‌ன் பெரு​விழா. தூய பனி​மய அ‌ன்​னை​யி‌ன் திரு​விழா ஜாதி, மத, இன‌ வேறு​பா​டு​க​ளைக் கட‌ந்து ஒரு சமய நல்லிணக்க விழா​வா​கவே கொ‌ண்​டா​ட‌ப்​ப​டு​கி​ற‌து எ‌ன்​றால் அது மிகையாகாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com