Enable Javscript for better performance
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 25th December 2019 11:03 AM  |   அ+அ அ-   |    |  

    velankani1

    கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி வண்ண விளக்குகலால் அலங்கரிக்கப்பட்டிருந்த வேளாங்கன்னி பேராலயம்

    தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனா்.

    தமிழகம் முழுவதும்  கிறிஸ்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனைகள் ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனா். திருப்பலிக்குப்பின் பரஸ்பரம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனா். 

    இயேசு பிறப்பை அறிவிக்கும்  விதமாக குழந்தை இயேசு சொரூபத்தை காட்சிப்படுத்திய வேளாங்கண்ணி பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சந்தோம் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு யேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை சொரூபத்தை காட்டும் மயிலை மறை மாவட்ட பேராயா்.

     

     

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சந்தோம் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் பங்கேற்றவா்களின் ஒரு பகுதியினா்.

     

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள சங்ககிரி பழைய எடப்பாடி சாலையில் உள்ள புனித அந்தோணியா் ஆலயம்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு வண்ண மிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள சேலம் நான்கு சாலையில் உள்ள குழந்தை இயேசு பேராலயம்.

     

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஈரோடு சிஎஸ்ஐ பிரப் தேவாலயம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai