Enable Javscript for better performance
ஆங்கிலேய படைவீரர்களுக்காக மதுரை கோட்டைக்குள் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆங்கிலேய படைவீரர்களுக்காக மதுரை கோட்டைக்குள் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயம்

    By எஸ்.பி. உமா மகேஸ்வரன்  |   Published On : 24th December 2021 02:28 PM  |   Last Updated : 25th December 2021 03:27 PM  |  அ+அ அ-  |  

    madu

    மதுரையில் எத்தனையோ புகழ்பெற்ற தேவாலயங்கள் இருந்தாலும் வரலாற்று புகழ்பெற்ற தேவாலயங்களாக ஓரிரு ஆலயங்கள் மட்டுமே உள்ளன. அதில்

    மதுரை கோட்டையைச் சுற்றி மேலவாசல், வடக்கு வாசல், தெற்கு வாசல், கீழவாசல் ஆகிய நான்கு பகுதிகளிலும் தேவாலயங்கள் உள்ளன. இதில் கோட்டைக்குள் கட்டப்பட்ட ஆலயம் என்ற பெருமையை புனித ஜார்ஜ் தேவாலயம் பெற்றுள்ளது. மேலும், கிறிஸ்தவர்களுக்காக அன்றி, ஆங்கிலேய படைவீரர்களுக்காக கட்டப்பட்ட முதல் தேவாலயம் என்ற பெருமையும் இதற்குண்டு. 

    1881-இல் மதுரையை நாயக்க மன்னர்களின் கடைசி வாரிசுகள் ஆண்டு வந்த நிலையில், மதுரையை பிறர் படையெடுப்பில் இருந்து பாதுகாக்கும் விதமாக ஆங்கிலேயர்களோடு நாயக்க மன்னர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டனர். அதன்படி, மதுரைக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக வரி வசூலிப்பது என்ற ஒப்பந்தத்தோடு ஆங்கிலேயப்படை மதுரை கோட்டைக்குள் நுழைந்தது. அப்போது அவர்களுக்கு தங்குவதற்கு தற்போதையை ஜான்சிராணி பூங்காவுக்கு எதிரே உள்ள நிலம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அங்கு படை வீரர்களின் முகாம் அமைக்கப்பட்டு அதற்கு மெயின் கார்டு ஸ்கொயர் என்ற பெயரிடப்பட்டது.

    இந்நிலையில் ஆங்கிலேய வீரர்கள் பிரார்த்தனை செய்ய கோட்டைக்குள் வேறு தேவாலயம் இல்லாத நிலையில் படை முகாம் உள்ள பகுதியிலேயே தேவாலயம் கட்டப்பட்டு புனித ஜார்ஜ் தேவாலயம் என்று பெயரிடப்பட்டது. நாயக்க மன்னர்களின் கட்டடக்கலை மற்றும் ஆங்கிலேய கட்டடக்கலை ஆகியவற்றின் இணைவுச் சாயலில் தேவாலயம் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் கட்டியதால் ஆங்கிலிகன் சர்ச் என்ற பெயரும் உருவானது.

    மேலும், ஆங்கிலேயர்களுக்காக மட்டுமே கட்டப்பட்டதால் தேவாலயத்தில் பிரார்த்தனை, வழிபாடு உள்ளிட்டவை முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. இதர தேவாலயங்களில் பாதிரியார்கள் இருப்பதுபோல இந்த தேவாலயத்தில் படைவீரர்களுக்கான ஆன்மிக பொறுப்பாளரான சாப்லின் பிரார்த்தனைகளை நடத்தினார்.

    இந்நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அடுத்து ஆங்கிலேயர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழலில் புனித ஜார்ஜ் தேவாலயத்தை இந்தியர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர். அப்போது முதல் மதுரையில் உள்ள கிறிஸ்தவர்கள் தேவாலயத்தை பராமரித்து பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும், மதுரையில் உள்ள அனைத்து தேவாலயங்களும் அமெரிக்கன் மிஷனரிகளால் கட்டப்பட்ட நிலையில் புனித ஜார்ஜ் தேவாலயம் படைவீரர்களுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டதால் சிஎஸ்ஐ, கத்தோலிக்கன் உள்ளிட்ட எந்தப்பிரிவுகளிலும் இணையாமல் தனித்து நிற்கிறது.

    இதர தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், புனித ஜார்ஜ் ஆலயம் உருவான தினமான டிசம்பர் 20 ஐக்கிய விருந்து தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆலயத்தில் ஏழை, பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி ஆதரவற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் சமமாக விருந்தளிக்கப்படுகிறது. இந்த விருந்து இன்று வரை தொடர்கிறது.

    தொடக்க காலத்தில் மீனாட்சியம்மன் கோயிலை நோக்கியவாறு தெற்கு திசையில் அமைந்திருந்த ஜார்ஜ் ஆலயம், விரிவாக்கத்தின்போது கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டதாக பிற்காலத்தில் மாற்றப்பட்டுள்ளது. நகரின் நெரிசலான இரைச்சல் மிகுந்த பகுதியில் ஆலயம் அமைந்திருந்தாலும் ஆலயத்துக்குள் சென்றுவிட்டால் எந்த சப்தமும் உள்வராதவாறு அமைதியுடன் திகழ்வது சிறப்பம்சமாகும்.  

    தேவாலயத்துக்குள் மீனாட்சியம்மன் பக்தரான ஆங்கிலேய ஆட்சியரின் கல்லறை  

    புனித ஜார்ஜ் ஆலயத்துக்கு உள்ள மற்றுமொரு சிறப்பு, தேவாலயத்தின் நிலவரையில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது மதுரையின் ஆட்சியாளராக இருந்த பீட்டர் ரோஸ் என்பவரின் கல்லறை அமைந்திருப்பது. ஆட்சியர் பீட்டர் ரோஸ், விபத்தில் இருந்து மீனாட்சியம்மன் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. அன்று முதல் மீனாட்சியம்மனின் தீவிர பக்தனாக விளங்கிய பீட்டர் ரோஸ் தினசரி மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    மேலும், மீனாட்சியம்மன் மீது பக்தியால் கோயிலுக்கு பொற்காசுகள், மீனாட்சியம்மனுக்கு தங்க நகைகள் போன்றவற்றையும் வாரி வழங்கியுள்ளார். இந்நிலையில் தனது இறுதிக்காலத்தில், தான் இறந்துவிட்டாலும் மீனாட்சியம்மன் கோயிலைப்பார்த்தவாறே தனக்கு கல்லறை அமைக்க வேண்டும் என்று பீட்டர் ரோஸ் கேட்டுக்கொண்டதால் அவருக்கு புனித ஜார்ஜ் ஆலயத்தில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.  


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp