போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட மனையை வாங்கியதன் மூலம் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறார் நடிகை அனுஷ்கா. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2,700 சதுர அடி கொண்ட நான்கு மனைகள் விற்பனைக்கு வர, அதில் ஒரு மனையை அனுஷ்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வாங்கினார். ஆனால், இவை போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்தது. நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் இப்போது நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக ஜனவரி 28-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார் அனுஷ்கா.