குரு ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "கருங்காலி'. நீண்ட இடைவெளிக்குப் பின் மு.களஞ்சியம் இப்படத்தை இயக்குகிறார். புதுமுகங்களுடன் அஞ்சலி நடிக்கிறார். படம் குறித்து மு. களஞ்சியம் கூறியது, ""காதலும், குடும்ப உறவுகளும் இப்போது
குறைந்து வருகிறது. விவகாரத்து வழக்குகள் இப்போது அதிகமாகிவிட்டன. முடிவுக்கு வராத விவகாரத்து வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கி கிடப்பதாகக் கூறப்படுகிறது. மேட்டுக்குடியினரிடம்தான் முன்பு விவகாரத்து அதிகமாக இருந்தது. இப்போது அனைத்து தரப்பிலும் விவகாரத்து சர்வ சாதாரணமாக மாறி விட்டது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமுகம் சீனு கதாநாயகன். அஞ்சலி கதாநாயகி. முக்கிய பாத்திரம் ஒன்றில் நான் நடிக்கிறேன். பல முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தில் சுனிதா வர்மா நடிக்கிறார். என் மற்ற படங்களைப் போல் இந்தப் படமும் கவனத்தைக் கவரும் விதமாக இருக்கும்'' என்றார் இயக்குநர் மு.களஞ்சியம்.
இசை - ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவாளர் - சிவசுந்தர். படத்தொகுப்பு - தாஸ்.