வி.ஐ.பி. பாக்ஸ்

*  கம்மல்கள் சேகரிப்புதான் சரண்யா பொன்வண்ணனுக்கு பொழுதுபோக்கு. எங்கே எப்போது போனாலும் விதவிதமான கம்மல்களை வாங்கி விடுவார். பெரும்பாலும் கிராமத்து அம்மா வேடங்களே வருவதால், ஷூட்டிங் போகும் போதெல்லாம் கி
வி.ஐ.பி. பாக்ஸ்
Published on
Updated on
2 min read

*  கம்மல்கள் சேகரிப்புதான் சரண்யா பொன்வண்ணனுக்கு பொழுதுபோக்கு. எங்கே எப்போது போனாலும் விதவிதமான கம்மல்களை வாங்கி விடுவார். பெரும்பாலும் கிராமத்து அம்மா வேடங்களே வருவதால், ஷூட்டிங் போகும் போதெல்லாம் கிராமத்து பாட்டிகளிடமே கம்மல்களை வாங்கி அணிந்து நடித்து விடுவாராம். பாட்டிகளும் பரிசாகவே கம்மல்களை தந்து விட, இப்போது சரண்யா வசம் இருக்கும் கம்மல்களின் எண்ணிக்கை 134.

  * தனது முதல் தயாரிப்பான "லகான்' வெளிவந்து 10 ஆண்டுகள் ஆனதற்காக விருந்து கொடுத்தார் அமீர்கான். முதல் மனைவி ரீனாவும் வந்திருந்தார். ""லகான்' படம் உருவாகக் காரணமாக இருந்தவர் ரீனா. சினிமா பற்றி முன் அனுபவம் இல்லாமல் தயாரிப்பை அற்புதமாகக் கையாண்டார்'' என கண்கலங்கினார் அமீர். அதே "லகான்' படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவ்தான் அமீரின் இப்போதைய மனைவி.

*  நடிக்க வருவதற்கு முன்பே மிஸ் இந்தியா, இந்தியா யு.எஸ்.ஏ, மிஸ் மெக்ஸிகன், மிஸ் பியூட்டி ஃபுல் ஐஸ் வேர்ல்ட் வைல்டு என எக்கச்சக்க போட்டிகளில் முதலிடம் வந்திருக்கிறார் ரிச்சா கங்கோபாத்தியாயா. பின் விளம்பரம், பின் "லீடர்' பட வாய்ப்பு. "நாகவள்ளி', "மீராபாய்' படங்கள் ஹிட்டடிக்க, இப்போது "இரண்டாம் உலகம்', சிம்புவின் "ஒஸ்தி' என தமிழிலும் பிஸியாகி விட்டார் ரிச்சா.

  * மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் பிரீத்தி ஜிந்தா. மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கும் "ஒயிட்' என்கிற படமாம் அது. ஒரு பெண் 20 வயது முதல் 60 வரை கடந்து செல்லும் இன்ப, துன்பங்கள் நிறைந்த வாழ்க்கைதான் கதையாம். 20 வயது கேரக்டருக்காக விசேஷ உடற்பயிற்சிகளை செய்து வருகிறாராம். பழைய பிரீத்தி ஜிந்தாவை பார்க்க காத்து கிடக்கிறதாம் பாலிவுட் உலகம்.

  * சிங்கப்பூர் மருத்துவ சிகிச்சையின் போது தன் உடல் நிலை பற்றி வந்த செய்திகளை கேட்டாராம் ரஜினி. நாளிதழ்கள், வார இதழ்கள் என அனைத்தும் சேகரித்து தரப்பட அமைதியாக படித்திருக்கிறார். உடல் நிலை குறித்து சரியான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு தன் பாணியில் சபாஸ்... போட்டு சிரித்தாராம். ரஜினி இப்போதும் தன் குடும்பத்தாரிடம் கேட்கும் கேள்வி ""நான் சென்னைக்கு வரும் நாள் மீடியாக்களுக்கு எப்படி தெரிந்தது?

*  விஜயகாந்தின் பிறந்த நாளில் உதயமாகிறது "கேப்டன் செய்திகள்'. ஆகஸ்ட் 25- அன்று நடக்கும் எளிமையான விழாவில் சேனலை தொடங்கி வைக்கிறார் விஜயகாந்த். கிராமப்புறச் செய்திகளை அதிகமாக ஒளிபரப்ப வேண்டும் என்பதுதான் விஜயகாந்தின் கட்டளையாம். விவசாயம், கல்வி இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுங்கள். விவசாயிகளின் நலனை கருத்தில் வைத்து செய்திகளை ஒளிபரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறாராம்.

* கௌதம் வாசுதேவ் மேனன் அஜித்துக்காக எழுதிய "துப்பறியும் ஆனந்த்' கதையில் சூர்யா நடிக்கிறார் என்பது பழைய செய்தி. விஜய் நடிக்கிறார் என்பதுதான் புது செய்தி. சூர்யாவின் கால்ஷிட் ஃபுல் என்பதால் விஜய்யிடம் கதை சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறார் கௌதம்மேனன். "வேலாயுதம்' முடிந்தவுடனே "துப்பறியம் ஆனந்த்' ஆரம்பமாகிறது. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.