சுடச்சுட

    
    nazi

    "நய்யாண்டி' பட விவகாரத்தில் சமரசம் அடைந்துவிட்டதாக நடிகை நஸ்ரியா தெரிவித்தார்.

    சற்குணம் இயக்கியுள்ள "நய்யாண்டி' படத்தில் தனுஷ் ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இந்தப் படம் வெள்ளிக்கிழமை (அக்.11) வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் காட்சிகளில் தனக்கு பதிலாக டூப் நடிகையை நடிக்க வைத்து தன்னை ஆபாசமாக காட்டியுள்ளதாக நடிகை நஸ்ரியா போலீசில் புகார் தெரிவித்தார்.

    இந்நிலையில், நடிகை தரப்புக்கு "நய்யாண்டி' படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. நஸ்ரியாவின் தந்தை நசீம், அவரது தரப்பு வழக்குரைஞர் தியாகேஸ்வரன் உள்ளிட்டோர் படத்தைப் பார்த்தனர். படத்தில் குறிப்பிட்ட ஆபாசக் காட்சிகள் ஏதும் இல்லாததால் படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து காவல்துறையில் தான் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக நஸ்ரியா கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai