வம்பு நடிகரே வெளியிட்டிருப்பார் ....முத்த காட்சி வீடியோ குறித்து பரவும் தகவல்...
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தற்போதுஅதிக அளவு பார்க்கப்படும் வம்பு நடிகரின் முத்த காட்சி வீடியோவை யார் வெளியிட்டார்கள் என்று பரபரப்பாக பேசி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகிய இரண்டு பிரபல நடிகர்களின் டீசர்களை விட பலராலும் பகிரப்பட்டு பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வம்பு நடிகர் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இருந்தபோதிலும் அவர் தான் என்று சமூக வளைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். மேலும் அந்த குறிப்பிட்ட வீடியோவை வம்பு நடிகரே வெளியிட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். உதராணமாக சில வருடங்களுக்கு முன்பு தாரா நடிகையை காதலித்து விட்டு பிரிந்த போது முத்த காட்சி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்புபடுத்தி கூறுகிறார்கள்.
சமீப காலங்களில் அவர் நடித்த படங்கள் வெளிவராத நிலையில் வம்பு நடிகரே இந்த வீடியோவை பரபரப்புக்காக வெளியிட்டிருக்கலாம் என்றும், அவரை பற்றிய செய்திகள் மீடியாக்களில் வரவேண்டும் என்பதற்காக இதனை அவர் செய்திருப்பார் என்றும் பலர் விமர்ச்சிக்கின்றனர்.