விஜய், அஜித் ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் எங்கள் தலைவர் தான் மாஸ் என்று மாறி மாறி சண்டை போட்டாலும், தலயும் தளபதியும் சிறந்த நண்பர்களாகவே உள்ளனர். தற்போது நடந்த சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம். இந்த சம்பவம் இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கத்தி படத்திற்காக விஜய் பாடிய செல்பி புள்ள பாடலை கேட்டு அஜித், முருகதாஸிடம் பாடல் நன்றாக உள்ளது, அதிலும் விஜய்யின் குரல் பாடலை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது, அனிருத் நன்றாக இசையமைத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளாராம். முன்பு ஒருமுறை தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை முதல் முதலாக அஜித் தான் கேட்டு, விஜய் நன்றாக பாடியுள்ளார் என்று ஏ.எல்.விஜய்யிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.