சுடச்சுட

    
    vijaykanth

    விஜயகாந்த், தன், இரண்டாவது மகன் சண்முக பாண்டியனை, சகாப்தம் என்ற, திரைப்படம் மூலம், நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

    இப்படத்திற்கான பூஜை, கடந்த டிசம்பர் 12ம்தேதி, சென்னையில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடந்தது. சந்தோஷ் என்பவர் இயக்குகிறார். விஜயகாந்த் தயாரிப்பு நிறுவனமான 'கேப்டன் சினி கிரியேஷன்ஸ்' படத்தை தயாரிக்கிறது. இதில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். தேர்தல் முடிந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த், தனிக்கட்சி ஆரம்பித்தும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு ‘விருதகிரி“ என்ற படத்தை இயக்கி நடித்தார். அதன் பிறகு விஜயகாந்த் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. முழு கவனத்தையும் அரசியலிலேயே செலுத்தினார்.

    இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார். தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதை சமீபத்தில் மேற்கொண்ட நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அவர் தெரிவித்தார். தற்போது விஜயகாந்த்தும் இப்படத்தில் நடிக்க உள்ளதால் அரசியல் அதிரடி வசனங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai