சுடச்சுட

  
  vijay-samantha-kaththi-shooting-spot

  விஜய்யின் எளிமையை கண்டு வியந்துள்ளார் நடிகை சமந்தா. விஜய், சமந்தா நடிப்பில் ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி‘.

  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் விஜய்யின் எளிமையை கண்டு நடிகை சமந்தா வியந்துள்ளார்.

  படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரத்தில் கேரவன் எதுவும் கேட்காமல் ஒரு சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் விஜய் அமர்ந்திருந்தது சமந்தாவுக்கு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாம். அதுமட்டுமல்லாமல் அடிக்கற வெயிலுக்கு குடை பிடிப்பதற்குகென்று ஆள் யாரையும் வைத்துக்கொள்ளாத விஜய்யின் எளிமையும் அவரை கவர்ந்துவிட்டதாம்.

  மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லும் குணம் படைத்த சமந்தா இப்படி விஜய்யை பற்றி  தனது டுவிட்டரில் புகழ்ந்து இருக்கிறார். இதற்கு முன்பு ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜாம்வால் கூட விஜய்யின் எளிமையை கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறார். “விஜய் இவ்வளவு பெரிய நடிகராக இருக்கிறார். ஆனால் சாதாரணமாக ஒரு மேஜை மீது படுத்து தூங்குகிறார்” என்று வியப்புடன் கூறியிருக்கிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai