சுடச்சுட

  
  aravindsamy

  அஜித் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார்.

  விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். அதில் ஒரு ஜோடி அனுஷ்கா. இன்னொரு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  இந்நிலையில் அஜித்-கௌதம் மேனன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகின. அதைப் பற்றி நாமும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ஆனால், இந்த செய்திகளையெல்லாம் வதந்தி என மறுத்துள்ளார் அரவிந்த்சாமி.

  இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, நிறைய அபத்தமான செய்திகள் வருகின்றன. நான் எந்தப் படத்திலும் வில்லனாக நடிக்கவில்லை. நானாக ட்டுவிட்டரில் போடற வரைக்கும் இதை மாதிரியான வதந்திகளை நம்பாதீங்க,” என அதில் கூறியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai