சுடச்சுட

  
  Naan-Sigappu-Manithan

  விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்த நான் சிகப்பு மனிதன் படம் அடுத்த வாரம் ரிலீசாகிறது.

  இதில் லட்சுமி மேனன் இதுவரை யாரிடமும் காட்டாத நெருக்கமும், ஓவர் கவர்ச்சியும் காட்டியுள்ளாராம். அதோடு நில்லாமல் விஷாலுடன் உதட்டு முத்தக் காட்சியிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படம் முடிவடைந்து தணிக்கை குழுவினரிடம் சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்டது.

  படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட அந்த முத்தக்காட்சி படத்தில் இடம்பெற வேண்டுமென்றால் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். முத்தக்காட்சியை எடுத்துவிட்டால் படத்திற்கு யு சான்றிதழ் அளிப்பதாகவும் கூறியுள்ளனர். அந்த முத்தக்காட்சிதான் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் நம்புகின்றனர்.

  எனவே, நான் சிகப்பு மனிதன் படம் நேற்று மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே படத்திற்கு யு சான்றிதழ் வழங்க முடியும் என்று உறுதிபட சொல்விட்டார்களாம். ஆனால் படக்குழுவினர் படத்தின் முக்கியம் கருதி சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்க மறுத்துவிட்டனராம். இதையடுத்து தணிக்கை குழுவினர் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக அறிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai