சுடச்சுட

  
  kathi

  ஈழத்தமிழர்களை மோசமாக சித்தரித்தாக கண்டனங்கள் எழுந்ததையடுத்து சமீபத்தில் வெளிவந்த இனம் திரைப்படம் திரையரங்கில் இருந்து வாபஸ் பெறப்பட்டது.

  இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் "கத்தி" படத்திற்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. கத்தி திரைப்படம் பிரம்மாண்ட  பட்ஜெட் என்பதால் ஐங்கரன் இண்டர்நேஷனலுடன், லைகா மொபைல்ஸூம் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் பல நாடுகளில் வியாபார நோக்கில் தொடர்பு வைத்திருக்கும் லைகா மொபைல்ஸ் நிறுவனத்தினர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடனும் தொடர்பு வைத்திருப்பதால் இப்படத்திற்கான எதிர்ப்பு குரல்கள்  எழும்பலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதற்கு முன் விஜய் நடித்திருந்த "தலைவா" படம் பலத்த சர்ச்சைக்கு பின் வெளிவந்து தோல்வி அடைந்தது. இத்தருணத்தில் கத்தி எந்த சிக்கலுமின்றி வெளிவருமா என்பது தெரியவில்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai