சுடச்சுட

  
  Goundamani

  ஜக்குபாய் படத்துக்கு பி நீண்ட இடைவெளி விட்டு 49ஒ மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார் கவுண்டமணி. அதுவும் காதாநாயனகனாக. இந்த படத்தில் விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை சொல்லும் வகையில் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளாராம் கவுண்டமணி.

  இந்த படத்தின் ஒரு பாடலை சமீபத்தில் வெளியிட்டார்கள். அம்மா போல அள்ளி தரும் மழை என தொடங்கும் அந்த பாடலை வெளியிட்டார்கள் பட நிறுவனத்தினர். அதனால் மிகவும் கோபம் அடைந்தாராம் கவுண்டமணி.ஏனென்றால் அவர் வெளியிட சொன்ன பாடல் இது இல்லையாம். ஓட்டு போடுங்க ஓட்டு போடுங்க என தொடங்கும் பாடலை வெளியிடக்கோரி தயாரிப்பு நிறுவனத்திடம் கூறினாரம்.ஏனென்றால் தேர்தல் நேரம் என்பதாலும் அந்த பாடல் தற்போதைய அரசியல் சூழ் நிலைகளை எடுத்து கூறுவதாக இருந்ததால் மக்களிடம்  நல்ல வரவேற்பை பெறும் என்பது கவுண்டரின் கணக்காம்.

  ஆனால், அவர்களோ இந்த நேரத்தில் அந்த பாடலை வெளியிட்டால் படத்துக்கு ஏதேனும் பிரச்னை வந்து விடும் என்று நினைத்து, அம்மா போல் அள்ளித்தரும் மழைதான் என்ற பாடலையு டியூப்பில் வெளியிட்டுள்ளனர். தான் சொன்ன பாடலை வெளியிடாம வேறு பாடலை வெளியிட்டு விட்டார்களே என்று தயாரிப்பு நிறுவனத்தினர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் கவுண்டமணி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai