சுடச்சுட

    
    pardesi

    நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கிய ‘பரதேசி’ படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதுக்கு ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா தேர்வாகியிருக்கிறார்.

    சிறந்த நடிகைக்கான விருது ‘விடியும் முன்’ படத்திற்காக பூஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக பாலாவும், சிறந்த ஒளிப்பதிவாளராக செழியனும், சிறந்த இசையமைப்பாளராக கடல் ‘மரியான்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்வாகியியுள்ளனர். வாழ்நாள் சாதனையாளர் விருது ஆச்சி மனோரமாவிற்கு வழங்கப்படுகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா நினைவு விருது ‘ஹரிதாஸ்’ படத்திற்கு வழங்கப்படுகிறது. கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு விருது ‘ராஜா ராணி’ படத்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த நகைச்சுவை நடிகர் விருது சூரிக்கு கிடைத்துள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடக்கவுள்ளது. 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai