சுடச்சுட

    

    முத்தக்காட்சிக்கு பயந்து கேரளாவுக்கு ஓட்டம் பிடித்த லட்சுமி மேனன்

    By dn  |   Published on : 08th April 2014 11:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lakshmi menon

    மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்து கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அந்த படம் வெற்றியை தொடர்ந்து தமிழில் பிஸியானதால் அவரது தாய்மொழியான மலையாளத்தை நினைத்துகூட பார்க்கவில்லை. இந்தநிலையில் விஷாலுடன் நடித்து வெளிவர உள்ள நான் சிகப்பு மனிதனில் படத்தில் உதட்டு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அதுமட்டுமின்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தான் யாருடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று கூறினார்.

    ஆனால் தற்போது அப்படி கூறியது தவறு என நினைத்தாராம். இனி தமிழில் படத்துக்குப்படம் உதட்டு முத்தக்காடசி வைத்து தனது உதட்டை புண்ணாக்கி விடுவார்கள் என்கிற பயம் அவருக்கு வந்துவிட்டதாம். அதனால் இந்த பரபரப்பு அடங்கும் வரை மலையாள பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறாராம். இவர் தற்போது மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில் திலீப் நடிக்கும் அவதாரம் என்ற படத்தில் நடிக்கிறாராம். முத்த சர்ச்சை தீரும்வரை இனி மலையாள படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம் லட்சுமி மேனன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai